முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

காதல்

விழிக்குள்ளே நுழைந்து உயிருக்குள் புகுந்தாள்
களிப்பினை மனதிடம் மொத்தமாய் பகிர்ந்தாள்
பார்த்தாள் கடைக்கண்ணால் உண்டானதே சொர்க்கம்
வேர்த்தேன் முதன்முறை புரியாத பக்கம்

என்னவென்று சொல்வேன் புதுவித மயக்கம்
எண்ணத்தை அவளிடத்தில் சொல்லிவிடத் தயக்கம்
என்றுதான் அவளாக காதலினைச் சொல்வாளோ
என்னுயிர் காதலியாய் தனையாக்கி கொள்வாளோ

ஒருநாளில் நிச்சயமாய் அற்புதமும் நிகழும்
பெருநாளாய் அதையெண்ணி உள்ளமதும் மகிழும்
பெண்ணே மவுணத்தினால் ஆசையினை அடைக்காதே
பொன்னே பூப்போன்ற என்நெஞ்சை உடைக்காதே

பருவத்தில் வருவதுதான் உன்மீதே வந்ததடி
இரவுகளும் தூக்கமில்லாக் கனவுகளைத் தந்ததடி
அருகினிலே வருவாயோ செவ்வாயை திறப்பாயோ
விரும்புவது நீயுமென செவிகுளிர உரைப்பாயோ

ஜெயம்
12-12-2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading