மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

ஆசான்

போதனையால் மாணவர்க்கு நல்லறிவை ஊட்டி
சாதனையாளராக்கி வெற்றிக்கு பின்னிருக்கும் வழிகாட்டி
எங்களின் எதிர்கால வாழ்க்கையை ஒளிமயமாக்கவே
தங்களை அர்ப்பணித்து தந்தார்கள் ஊக்கமே

கல்லாக இருந்தவரும் சிலையாக உருமாற்றம்
சொல்லுக்கேட்கா குழப்படிகளும் அடைந்தனரே மாற்றம்
கல்வியோடு ஒழுக்கத்தையும் கற்றுத்தரும் தன்மை
சொல்லப்போனால் உன்னத பணியாளர் உண்மை

கரும்பலகையில் சுண்ணாம்புக் கட்டியால் கோலம்
உருப்பட்டுக்கொண்டது அன்றிலிருந்தே பொன்னான காலம்
கசடறக் கற்றே உள்வாங்கியவை ஏராளம்
நிசமாக ஓயாதுரைத்ததால் கற்றவைகள் தாராளம்

கணித ஆசிரியரால் கணக்கிலே புலி
கனவிலும் சுவைத்தேன் தமிழெனும் தேன்துளி
தலைமுறை தலைமுறையாக வளர்த்துவிடும் சேவை
களைக்காத இவருழைப்பு சமுதாயத்திற்கு தேவை

ஆசான் என்பவர் என்றும் வணக்கத்துக்குரியவர்
பேசாத தத்துவமா பெருமைக்குரிய பெரியவர்
ஊக்கத்தை உரமாக்கி வளர்த்தவரே வாழ்கவே
நோக்கத்தின் புனிதத்தை
வணங்கிடும் வாழ்க்கையே

ஜெயம்
22-10-2024

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading