15
Oct
இல *100*
கற்றலின் படியே காசினி உயர்வே
ஏட்டில் எழுதிய எழுத்து அழியாது...
15
Oct
கற்றலின் படியே காசினி உயர்வே
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-10-2026
அறிவெனும் உளியை அகத்தினுள் செலுத்தி
ஆற்றலை நாளும் செதுக்கியே நாமும்
கற்றலின்...
15
Oct
கற்றலின் படியே காசினி உயர்வு
தங்கசாமி தவக்குமார்
கற்றலின் நாம்
காணும் பெறு
காலத்தால் என்றும்
நிலைத்திடும்...
ஜெயம் தங்கராஜா
பூக்கும் புத்தாண்டு
பூத்தது புத்தம்புதிய புத்தாண்டு
சேர்ந்தது புதுக்கோலம் பூண்டு
வேண்டாமே இனிமேலும் சந்தேகம்
தோன்றிடும் வாழ்க்கையில் சந்தோசம்
சோகங்கள் மனம்விட்டு தொலையும்
மேகங்கள் அவைபோன்றே கலையும்
நினைத்ததை அடைந்திடும் பேறும்
மனைவந்து அழகாகச் சேரும்
மாற்றங்கள் தினத்திற்குள் பிறக்கும்
ஏற்றத்தின் கதவுகள் திறக்கும்
ஜொலிக்கும் வாழ்க்கை ஊருக்குள்
செழிக்கும் புகழும் பேருக்குள்
நல்லதின் துவக்கமே இதுவாக
இல்லத்தின் குதூகலமும் தெளிவாக
புன்னகை சேர்த்திடும் புத்தாண்டு
மன்னிலே வந்தது வெற்றியாண்டு
வாழ்க்கையை கொண்டாடும் தொடக்கம்
ஏழ்மையை கட்டாயம் முடக்கும்
விரும்பியதெல்லாம் விரைந்துமே கிடைக்கும்
நிரம்பியே நிம்மதி மனதினைப்படைக்கும்
மதங்களற்ற மாதம் பிறக்கட்டும்
சிதைந்து சாதிகள் இறக்கட்டும்
திக்கெட்டும் அன்பு பொங்கட்டும்
மங்காது மகிழ்ச்சி தங்கட்டும்
ஜெயம்
Author: Nada Mohan
06
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-10-2026
என் மடியில் மழலையாய் நீயும்
எம் வாழ்வின் வரமாய்...
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...