ஜெயம் தங்கராஜா

வாழ்வின் அர்த்தம் புரிந்துவிட்டால்

இங்கே மண்ணின் வாழ்க்கை ஒருதரம்
அங்கே எதுவும் இல்லை நிரந்தரம்
இந்தத் தத்துவத்தை உணர்ந்தாலே எவரும்
அந்தப் பக்குவமே ஆயுளுக்கும் அமைதிதரும்

ஆனபடியாலே இருக்கின்ற வாழ்வினை சரிபார்ப்போம்
வீணடிக்காது நாட்களை பிரிவுகளையகற்றி கைகோர்ப்போம்
ஆசையும் கோபமும் பொறாமையும் விட்டகலட்டுமே
மாசை அகற்றியே மனங்கள் ஒட்டிப்பழகட்டுமே

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலான நிகழ்விது
இருந்தால் உறவுகளாய்
உற்பத்தியாகாதோ மகிழ்வது
புதுவாழ்க்கை ஒன்றுதனை
வாவென்றே அழைப்போமே
அதற்குமுன்னர் குறையுள்ள குணங்களைத்தான் களைவோமே 

ஜெயம்
23/05/2022

Nada Mohan
Author: Nada Mohan