ஜெயம் தங்கராஜா

சசிச

நடிப்பு

எது தங்கம் எது தகரம் இன்னும் தெரியவில்லை
யார் அசல் யார் நகல் அதுவும் புரியவில்லை
முகமா இல்லை முகமூடியா முன்பே சரியாய் தெரியவில்லை
அகத்தை சரியாய் கணித்துவிட கொண்ட அனுபவம் போதவில்லை

பொய் பேசி பொய்யுடனே வாழும் போலி மனிதர்கள்
மெய்யானவர் தாமென உலவிடுவார் வேசம் கலையுமட்டும் புனிதர்கள்
உலகமகா நடிப்பு சிவாஜி கணேசனையே தூக்கி முழுங்கிடுவார்
பழகிகிடுவார் நண்பரென காரியம் முடிந்ததென்றால் சொல்லாமலே விலகிடுவார்

தற்போதைய வாழ்க்கையுடன் நடிப்பு என்பது கொடிகட்டிப் பறக்கின்றது
சொந்த சுபாவத்தை மறைத்து வாய்கள் மட்டுமே பேசுகின்றன
தனக்கு நன்மை பயக்கின் சாத்தானையும் சர்வேஷ்வரனென புகழுவார்
மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்து
வாடகைக்கு வாய்விட்டு மகிழுவார்

அடிபட்ட பின்புதான் வாழ்க்கையில் சிலரை அறிய முடிகின்றது
பிடிபடும் வரைக்கும் நடிப்பவர்களின் நாடகம் தொடரத்தான் செய்கின்றது
தேவைகள் முடியுமட்டும் பாசம் நேசம் அழகாகவே அரங்கேறுகின்றன
நோவைத் தரும் அவைகளென தூக்கியெறிந்த பின்னரே தெரிகின்றது

ஜெயம்
30-04-2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading