ஜெயா நடேசன்

ஒளியின்றி
ஒளிர்வெங்கு..

கவி இலக்கம்-1770

சூரிய ஒளியின் ஒளிக்கதிர்கள்
உடலில் சுடும்போது
மனம் ஒளிர் பெற்று மகிழ்கிறது
தீப ஒளி மெழுகுவர்த்தி
ஒளிர்வெங்கும்
சமய வழிபாட்டிற்கு ஏதுவாகிறது
அஞ்ஞானம் அகற்றி மெஞ்ஞானம் பிறக்க
வாழ்வில் ஒளி வீசி ஒளிருகின்றது
ஒளியின்றி உயிர்களுக்கு வாழ்வில்லை
இயற்கையே அர்த்தமற்று போய் விட ஏதுவாகின்றது
செடி கொடி மரங்களுக்கு உணவாக ஒளியே சத்தாகிறது
அன்பும் அறமும் தழைத்தோங்க
அமைதி சமாதானம் நிலவ
வாழ்விற்கு ஒளியாய் மிளிருகின்றது
இருள் அகற்றி ஒளி மிளிர உலகமே பிரகாசமாகும்
இல்லம் சிறக்க உள்ளம் மகிழ
ஒளியே ஏற்றி மகிழ்வோம் ஒளிர்வாக
ஜெயா நடேசன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading