தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : தியாகமே தீர்ப்பானதா

சிறக்கடிக்கும் பருவம்
சிகரத்தை தொட்டு விடும் துடிப்புள்ள விடா முயற்சி
சுற்றுகின்ற பூமியை
சுற்றி விட சீர்கொண்ட
பாதை வழி
வீரமுள்ள தலை முறை தான்

தாய் நிலத்தை நேசித் தார்
தம் சுகமனைத்தும்
தான் துறந்தார்
சுதந்திர வேள்வித்
தீயினிலே நெய்யாகத்
தான் கரைந்தார்
தன் மானம் தலை நிமிர
தாய் மண்ணில் விதையானர்
தார்மிக நிலை மறந்த
வலுவான வல்லரசு
வஞ்சகமாய் வலை விரித்தத்தார்
நம் சுதந்திரத்தை தீயிட்டார்

நீறாக எரிகின்ற தாகத்தை தனிப்பதற்கு
தியாகமே தீர்ப்பாக
விடுதலைக்காய் தவமனோம்!!!

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading