பாசப்பகிர்வினிலே……58
பாசப்பகிர்விலே!
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி முதல் ஒலி உறவுகள்
தங்கசாமி தவக்குமார் 20.04.2023
புலம் பெயர் உறவுகளை
தக்கப்படி சேர்த்து கோர்த்து
FA முகமாய் மலர்வு கண்ட
முதல் ஒலி உடகமாம்
London Tamil வானொலியே
நம் முதல் ஒலியே
தாய் மொழி காவி
தளர்விலா பணி நகர்வில்
பல பக்கப் பார்வையிலே
பரிணாமம் கொண்டு
பவனிவரும் நம் ஒலியே
அன்று தொட்டு இன்று வரை
இணைவு கண்டு
நீங்காத நினைவலைகளை
மீட்டி பார்க்கும் நிகழ்வாய்
ஓர் மகுடம் முதல் ஒலி உறவு
மான்புமிகு அதிபர் பணிக்கு
ஆரவார ஆனந்த படிவு
அற்புதமாய் வார 11ஐ
கண்டிருக்கும் மலர்வுக்கு வாழ்த்து
தொகுத்து தரும் தூரிகைக்கு
மன மகிழ்வாய் வாழ்த்தும் நன்றியும்
வியாழன் கவி : வளர்ந்த குழந்தைகள் தாமே
27/04/2023
கள்ளமில்லா உள்ளம் கொண்ட
வள்ளல் ஆனவர்
மாசுபடா உறவு தனை
வாரி கொடுப்பவர்
நாளை வரும் பொழுதுகளை
மறந்து என்றுமே
புத்தம் புது மலர்களை போல்
பொலிவு கொண்டவர்
அடம் பிடிக்கும் ஆற்றலோடு
பிறர் மனதில் வாழ்பவர்
என்றும் இவர் இறை ஈர்ந்த
வளர்ந்த குழந்தைகள்
நம் கைகளிலே தாங்கி
கொள்ள வலிமை வேண்டுவோம்
அவர் வலிமை வேண்டுவோம்!!!
