உயிரான உறவு 86
உயிரான உறவே…….
தமிழும் பாரதியும்
“ தமிழும் பாரதியும் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 12.09.2024
தமிழும் பாரதியும் பாரதியும் தமிழும்
பிரிக்க முடியாப் பிணைப்புக்கள்
தமிழ் தமிழ்ப்புலமை
தமிழ்ச் சொல்லின் பெருமை பேசிய கவிஞன்
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்து
தேசமெல்லாம் தமிழோசையை
ஒலிக்கவிட்ட உணர்ச்சிக் கவிஞன் பாரதி !
தமிழன்னையின் தவப்புதல்வனாகி
தமிழுக்கு தந்தையென மகுடம் சூடி
தித்திக்கும் தேனாகத் தமிழைச் சுவைத்து
தெவிட்டாத இன்பத் தமிழைப் பருகி
தமிழ் வார்த்தையால் யுத்தம் செய்து
தமிழை நேசித்து சுவாசித்த கவிஞன் பாரதி !
தெளிவு கொண்ட பாரதியின் தமிழே
தெய்வமகன் பாரதியின் மொழி
விடுதலைக் கோடியில் பாடல் எழுதி
விடியல்க் கீதத்தை கூவிய குயில்
தமிழினத்தின் இருளினை நீக்கிட
ஒளி வீசிட வைத்த சூரியன் !
புதிய உலகைத் திறக்க
நவீன கவிதைக்கு அடித்தளமிட்டு
கவியுலகச் சக்கரவர்த்தியாகி
கவியுலகை ஆட்சி செய்த பாரதி
புவியுலகையும் வென்றான் கவியாலே
பாரதி இல்லையேல் தமிழும் இல்லை
பாரதியும் தமிழும் என்றும் நின்று நிலைக்கும் !
Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments