தியாகதீபம் 70

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
18-09-2025

தியாகதீபமே திலீபன் அண்ணா
நீரின்றி, உணவின்றி
நீவிர், பட்டினியால்
உயிர் துறந்த உத்தமனே!

தன்னினம் பகைவனால் அழிய
1987 செப்டம்பர் 15ம் நாள்
நல்லைக் கந்தனின் முன்றலிலே உண்ணாநிலைப் போராட்டம்

தியாகத்தின் வலியை
தீர்க்கமாய் உணரா அரசு
உண்மை உரையை செவி
எடுக்கா இதயங்கள்.

1987ம் ஆண்டு செப்டம்பர்
26ம் நாள் சனிக்கிழமை தியாகப்பயணத்தின் பன்னிரெண்டாவது நாள்,

தாகத்தோடு போராடி
தியாகத் தீயாய் நீ மாறி,
அகிம்சை வழியில்
அணைந்தாயே

சரித்திரத்தில் உன் பெயர்
சமாதியாய் பதித்தாயே.
இனத்திற்காய் வாழ்ந்தோரை இதயத்தால் வணங்கிடுவோம்..

Jeba Sri
Author: Jeba Sri

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading