நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

தியாகம் 93

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-12-2025

விதை ஒன்று மண்ணில் வீழ்ந்து
விருட்சமாய் பரந்து செழிக்கிறது
தன் நிழலைத் தானம் தந்து,
தவித்தோர்க்கு குளிர்ச்சி அழிக்கிறது.

பெற்றோரின் தியாகத்திற்கு நிகர்
பெரிதாய் ஏதுமில்லை இவ்வுலகில்
மெழுகுவர்த்தியாய் தமை உருக்கி
மேலோங்க துணை பெற்றவரே

சிலர் வாழ்ந்து மறைவர்,
சிலர் மறைந்தும் வாழ்வர்
சரித்திரத்தில் தியாகிகள்
சாய்வதில்லை உயிரற்றும் வாழ்வரே

கோபுரத்தின் அத்திவாரம் போலும்
கோலகலமாய் ஒளி தரும் விளக்கு திரியாயும்
பல தியாகங்கள் மறைகின்றன
பார் போற்றும் தியாகியாய் தொடர்வோம் நாம்.

Jeba Sri
Author: Jeba Sri

தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

Continue reading