புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

திருமணமாம்

சந்த கவி
இலக்கம்_182
சிவாஜினி சிறிதரன்

“திருமணமாம்”
இருமனம் இணைந்து
ஒருமனதாகி
இன்னாள் நன்னாள்
பொன்னாள்
புனித நாள்!

உள்ளத்தை
உறவாக்கி
தாலியை வேலியாக்கி
அன்பினால்
மாளிகை கட்டி
புன்னகையால் குடிபுகுந்து !

அழகான அன்பு பூந்தோட்டம்
ஆனந்த புன்னகை தேரோட்டம்
இன்ப தேன் எங்கும் சிந்தட்டும்
ஈங்கு உவகை பொங்கட்டும்!

முதுமை வந்த போதும்
இளமையாகட்டும் காதல்
முடிநரைத்த போதும்
இனிமையாகட்டும் வாழ்க்கை!

நன்றி
வணக்கம்
08.03.25