திருமணமாம்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

திருநிறைச் செல்வன்
உதய சூரியன்
திருநிறைச் செல்வி
இளைய நிலா இருவருக்கும் திருமணமாம்

செந்நிறக் கம்பளம்
போர்வையிட ஒளிக்
கற்றை எனும் போர்
வீரர் படைசூழக் கம்பீர
நடையில் கதிரவன்

நீல வர்ணக் குடை மூடிட
சிவப்பு நிறப் பட்டாடை உடுத்தி நட்சத்திரங்கள்
கூட்டம் தேவர்கள் போல்
அழைத்து வர

மின்னல் பேரொளி இட
இடி முழக்கம் மேளம் இட
கைதட்டி ஆரவாரிக்கும்
மழையோ துளியில்
கோர்த்த மாலையை
இருவர் கழுத்திலும்
அணிவித்து விட இருவருக்கும்
திருமணமாம்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading