சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

திருமதி.அபிராமி கவிதாசன்.

31.01.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-208
தலைப்பு !
“விருப்பு “
விருப்புக் கொண்டு வினையில் இறங்கு
வியக்க வைக்கும் விதியில் மதியால்//

திருத்தம் உடனே தினமும் முயற்சிக்க
திருப்பம் காண்பாய் திகைப்பில் மூழ்கி //

விரும்பி உண்டிட விசமும் வசமாகும்
வேண்டாதவை என்றதும் விலையாயினும் விசமாகும் //

கருத்தாய் கண்ணாய் கருமச் செயலை
கருதிச் செய்திட கனியாய் தித்திக்கும் //

விருப்பம் தவிர்த்து வெறுப்பைக் காட்டி
விருந்தும் கூட காயாய் கசக்கும்//

உருவம் ஒன்றும் உள்ளம் ஒன்றும்
உரைக்க கேளா உண்மை அறிக //
……………….நன்றி 🙏………………………..
கவித்திறனாய்வு தட்டிக்கொடுப்பு
பணி, அதிசிறப்பு . தங்கள் பணி தொடர
மனமார்ந்த பாராட்டுக்கள்.
பாவை அண்ணா. நன்றிகள் 🙏

நன்றி …பாவை அண்ணா 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading