வரமாகும் வாய்ப்புகளே

ராணி சம்பந்தர் வரமாகும் வாய்ப்புகளே விழித்திட உரமாகும் ஆய்வுகள் துளிர்த்திடும் சோரமாகும் வேண்டா வெறுப்பிலே பாரமாகும் தேய்வுகள் அழித்திடும் தரமாகும்...

Continue reading

வரமாகும் வாய்ப்புகளே..

வியாழன் கவி 2296 வரமாகும் வாய்ப்புகளே!!! வரமாகும் வரவுமாகும் சிரமேல் தாங்கினால் சிறப்புமாகும் சீராகும் காற்று வீசும் திசை போல் கடினம்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே…

வசந்தா ஜெகதீசன் வரமாகும்வாய்ப்புகளே.... வாழ்வெனும் மலர்த்தோப்பு மலர்ந்திடும் வேளை வரங்கள் பல எமதாகும் வாய்ப்பிற்குள் நாளை இருசுடராய்...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

***** பிரிவின்நினைவலைகள்****
மங்கையென மலர்ந்து மண்ணிலே தவழ்ந்த சங்கத் தமிழ்த்தாயம்மா
எங்கள் திங்கள் ஒளிநீயம்மா
புங்கை நகர் புகுந்து பொன்னவரை மணந்து புதுமை கொண்டாயம்மா
புன்னகைத்தாயம்மா
பொங்கும் உணர்வாலே பொதிகைத் தமிழ்த்தாயை போற்றி வளர்த்தாயம்மா
போற்றி வளர்த்தாயம்மா
எங்கும் தமிழ்வளர்த்து எழிலாய் கவி ஆக்க எண்ணம் கொண்டாயம்மா – அதனில்
ஏற்றம் கண்டாயம்மா

கொவ்வை இதழ் விரித்து முல்லை சிரிப்புதிர்த்து முகத்தால் மலர்ந்தாயம்மா _ எங்கள்
அகத்தில் நிறைந்தாயம்மா
பாமுகப்பரப்பில் பாவை நீதோன்றி
பணிகள் செய்தாயம்மா -தமிழைப்பார்த்து
வளர்த்தாயம்மா

கொஞ்சும் தமிழ்பாடி கோதையரே நீங்கள்
கொடுமை சொல்லுங்களேன்- பெண்கள் மடமை தீருங்களேன் என்று
அஞ்சல்கவி ஆக்க அகிலமே பறந்த
அஞ்சுகம் நீயம்மா எங்கள் அஞ்சுகம் நீயம்மா
கங்கை நதிசேர காசிநகர் கண்டு கண்ணில் மறைந்தாயம்மா
கங்காதரர் கழலை அடைந்தாயம்மா
நெஞ்சம் உள்ளவரை நினைவில் உனையேந்தி நிலைக்கச் செய்வோமம்மா – நின்னை நிலைக்கச் செய்வோமம்மா…
* ஓம் சாந்தி *

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading