திருமதி. செ. தெய்வேந்திரமூர்த்தி

வணக்கம் அண்ணா!
வணக்கம் கமலாக்கா!
வணக்கம் கவிஞர்களே!

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்- 237
10/10/2023.

அலையோசை
“”””””””””””””
கடலே விரைந்து கரைகள் தடவக்
கைகள் நீட்டிக் கதறல் ஏனோ?
விடலைக் குணமா விருப்பத் துடிப்பா
வியக்கும் வகையில் வித்தை செய்தே
உடற்றும் மாந்தர் உள்ளம் மகிழ
உள்ளே சென்று ஓங்கி ஒலித்து
மடங்கிச் சுருண்டு மலைபோல் எழுந்து
மனத்தைக் கட்டும் மாயம் புதிதே!

அலையே நீதான் அகிம்சை அறியாய்
ஆற்றல் காட்டி அமிழ்த்தும் செயலால்
மலையாய் எழுந்து மாய்த்த கொடுமை
மதிக்குள் குடையும் மதிப்பைக் குறைக்கும்
கலையாய் நடனக் கதிபெற் றசைந்து
கவலை தந்து களித்தல் முறையோ
விலையே இல்லா விளைச்சல் உனக்குள்
விதியாம் சுனாமி வேகம் எதற்கோ!

கோவென் றொலித்துக் கூச்சல் போட்டுக்
கோபம் கொளினும் கூடும் மக்கள்
ஆவென் றுன்றன் அலைக்கை பற்றி
அலைக்குள் நனைக்க அணைக்கும் நுரைகள்
வாவென் றழைப்பாய் வலைஞர் வருவார்
வாரிக் கொடுப்பாய் வள்ளம் நிறைத்து
போவென் றுனையே பொய்யாய் உரைப்போம்
பொங்கிச் சிரிப்பாய் பொலிவுன் ஓசை!

திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading