திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே!

திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே!

உரத்தில் பலமும் உளத்தில் அன்பும்
உரக்கச்சொல்லும் திறனைப் பெற்றவரே!
கரங்கள் காட்டும் வித்தை கண்டு
கண்ணால் சொக்கி நின்றோமே!
பலத்தில் நீங்கள் பண்புடையீர்
பாராள வந்த சொந்தங்கள் நீவீர்

சிறப்புக் குழந்தைகளாய் சிறகடிக்கும் வல்லோரே!
அகத்தில் அன்பும் அழகிய நுண்ணறிவும்
இகத்தில் இரக்கமும் கொண்டு
எழுகின்ற பூஞ்சோலைக் குருவிகளே!
இசையாய் நாடகமாய் பாட்டாய்
இசைத்திடும் சோலைக்குயில்கள்

பாமுகப் பள்ளியிலே நின்றாடும் மயில்களே!
பக்குவமாய் உங்கள் எழில் கண்டு சொக்கினோம்
நான்முக வேந்தாய் நற்கருமம் ஆற்றும்
அப்பாவிக் குழந்தைகளே!
கடவுளின் வரம் நீங்கள்
கனிந்துருகும் பேரோளிகள்
திறமையின் உச்சம் கண்டு சிந்தித்தோம்
இன்னும் திறனுடன் ஓங்குக! என்றும்

நகுலா சிவநாதன் 1759

Nada Mohan
Author: Nada Mohan