மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

துளிர்ப்பாகும் வசந்தம்- 55

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-04-2025

துளிர்ப்பாகும் வசந்தம்
துயர் நீங்கும் இதயம்
இனிமையான குயிலின் கானம்
இதமான காற்றின் மெல்லிசை

பசுமையும் கொஞ்சம் படர
புத்துணர்ச்சி மகிழ்ச்சி பிறக்க
பூத்துக் குலுங்கும் பூங்காவனமாய்
புதுவாழ்வின் புதுமை நிகழ்வாய்

அயலவர் ஒன்று கூடி
அழகிய தெருக்களாய் அலங்கரித்து
திருவிழா விருந்தனெ சிறந்தோங்கி
வலுவான சமூகமாய் வளர்ந்தோங்கி

வாழ்வுக்கு கிடைத்த சிறந்த காலமாய்
வரவேற்போம் வசந்த காலத்தை
துளிர்ப்பாகும் வசந்தத்தில்
துளிர்க்கட்டும் இனிமையும்..

Jeba Sri
Author: Jeba Sri