நன்றியாய் என்றுமே……

நன்றியாய் என்றுமே……..ரஜனி அன்ரன் (B.A) 04.09.2025

நன்றியென்ற ஒற்றை வார்த்தை
உள்ளத்தோடும் உணர்வோடும் ஒன்றிணைந்தசக்தி
மூன்றெழுத்து மந்திரம் மானிடத்தின் அடையாளம்
வெறும் உதட்டில் பிறப்பதல்ல
அடிமனதின் ஆழத்தில் முகிழ்ப்பது தான்நன்றி
அன்னை தந்தை ஆசானின் சேவை
அளவிட முடியா நன்றியின் வித்தே !

நன்றியில்லா வாழ்வு வெறுமை
நன்றிகூறும் மனமே செல்வம்
நன்றியுணர்வில் மனிதம் மலரும்
பாசஉறவில் மகிழ்ச்சி பொங்கும்
நன்றியோடு வாழ்வோம் என்றும் !

சிறுதுளிஉதவி நதியாய் பெருகும்
ஒருசிறு புன்னகை பரவசமாக்கும்
நன்றியுள்ள மானிடன் இதயத்தில்
ஒன்றித்து வாசம்செய்வான் இறைவனும்
நன்றியென்ற பண்பு இல்லையென்றால்
மனிதமும் மரணித்தேவிடும்
நன்றியோடு வாழ்வோம் என்றும் !

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading