ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

நன்றியாய் என்றுமே 69

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
04-09-2025

இருள் அகற்றும்
ஒளி விளக்கே
அறிவொளி தரும்
அழகிய சூரியனே

எழுத்தாய் புனைந்து
எழுதித் தள்ளி
சொல்லாய் வார்த்து
சொரிந்து பேசி

எல்லாப் பக்கமும்
எடுத்து இயம்பி
எமை வளர்த்த
ஏணியும் தானே

இதய ஆழத்தில்
நன்றி வேரூன்றி
கண்ணின் ஓரத்தில்
கண்ணீர்த் துளியோடு

பிரிவின் விளிம்பில்
பிரிந்தாலும் நாம்
கல்வி போதித்து
கண்களைத் திறந்தவரை

ஒவ்வொரு நாளும்
அன்பு உணர்வோடு
நன்றியாய் என்றுமே
நம் சமுதாயம் வளர்ப்போம்.

Jeba Sri
Author: Jeba Sri

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading