நவராத்திரி நாயகிகள்

கெங்கா ஸ்ரான்லு

நவராத்திரி ஒன்பது நாள்
முதல் மூன்று நாள் துர்க்கைக்கும்
மலைமகள் வீரத்திற்கு தலைவி
வீரம் வேண்டி தவம் இருந்தால்
தரணியாள வரம் குடைக்கும்
அடுத்த மூன்று நாள் திருமகளுக்கு
இந்த நாளில் விரதமிருக்க
அலைமகளாகிய லட்சுமி கடாட்சம்
கிடைக்கும்
செல்வம் பெருகும் மகிழ்வுடன
கஷ்டமின்றி வாழலாம்
கடைசி மூன்று நாளும்
கலைமகளுக்கு
கல்விக்கரசியல்ல்லவா
கற்றோராய் வர வரமளிப்பவள்
மலைமகள் அலைமகள் கலைமகள்
மூவரும் ஒருஇடத்தில் சேர்ந்து இருந்தால்
நிகரே இல்லை
அவர்கள் இணைந்திருப்பது அருமை
ஒருவரிடம் லட்சுமி இருப்பாள்
கலைமகள் இருக்க மாட்டாள்
புலவரிடம் கலைமகள் இருப்பாள்
வறுமை அங்கு நிறைந்திருக்கும்
சிலரிடம் துர்க்கை இருக்க மாட்டாள்
அரசனிடம் செல்வம் வீரம் இருக்கும்
கல்வி இருக்காது
இராவனேஸ்வரனிடம் கல்ஙி செல்வம் வீரம்
மூன்றும் இருந்தும் முட்டாள் ஆனானே
சிலருக்கு மட்டுமே அப்படி பாக்கியம்
கிடைக்கும்
மூன்றும் ஓரிடத்தில் இருக்க
முத்தேவியர் அருள் வேண்டும்!

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

Continue reading