பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நாதன் கந்தையா

விருப்ப தலைப்பு.

…..அறிவு…..

கண்ணீர் விட்டுன்று – நீ
கதறி அழுதாலும்
மண்ணில் புரண்டொருகால்
மலையை சுமந்தாலும்
கல்மேல் தலை மோதி
கட்டையிலே போனாலும்
வல்ல பொருளின்றேல்
வாழ்வில்லை என்றிடுவேன்.

கடவுள் அருள் புரிவார்
காசு பணம் தந்திடுவார்
பள்ளிக்கு போகாமல்
பட்டமும் கிடைத்துவிடும்
மெய்யென்று நீ நம்பி
ஐயா உருகுவதேன்
அடி வயிறு எரிவதுமேன்
மெய் ஒன்று சொல்லுகிறேன்
முடிந்தால் அறந் தொழுகு.

சாமி தானக பிறந்ததில்லை
நாடாள துடிக்கவில்லை.
கோவிலுக்குள் சாமி
இருந்தால் நல்லதுதான்.
கடவுள் சமயம் எல்லம்
முன்னோரின் தந்திரம்தான்.
சீராய் மானுடத்தை
செப்பனிட சாமி என்றார்.

கல்லும் கடல் வானும்
புல்லும் மர நிழலும்
புதிய விஞ்ஞானிகளும்
மெல்ல மெல்ல புதுயுகமாய்
எல்லாமே மாறகண்டோம்
இல்லானாய் எளியவனாய்
இப்புவியில் நீ பிறந்து
இல்லாத ஊருக்கு
இரும்புப் பாலம் போடாதே

நல்ல கல்வி நீ பயின்று
நாலுபேர்போல் பொருள் கறந்து
வல்லானை வெல்ல
வழி நூறு தெரிகிறது.

மந்திரத்தால் மாங்காய்
விழுந்திடவும் போவதில்லை.
மா மரத்தில் பூசினிக்காய்
காய்த்திடவும் சான்று இல்லை.
மெல்ல நிமிர்ந் தெழுந்து
முப்புரவும் கல்வி கற்று
பொல்லா உலகை நீ
வெல்லப் பொருள் தேடு.
எல்லாம் அகன்றுவிடும்
உன் கையில் உலகாடும்.

……நாதன் கந்தையா…..

Nada Mohan
Author: Nada Mohan