நான் யார்

கவிதை 815

கண்ணாடி காட்டுவது ஒன்றை
உலகம் காட்டுவது வேறொன்றை
உறவுகள் காட்டுவது இன்னொன்றை
இவையெல்லாம் காட்டும் நான் யார்

நேற்று இன்று நாளை
மூச்சின் கொடையால் வாழ்க்கை
வருவதற்கு முன் எங்கிருந்தேன்
போனபின் எங்கே செல்வேன்

புன்னகைக்குள்ளும் நான் புதைந்தேன்
கண்ணீரிலும் நான் குளித்தேன்
வெற்றியிலும் நான் மிளிர்ந்தேன்
தோல்வியிலும் நான் சிதைந்தேன்

நான் பிறந்த இல்லம்
நான் வளர்ந்த ஊர்
நான் பயணித்த பாதை
இல்லை அனுபவங்களின் தொகுப்பே நான்

ஜெயம் 26-08-2026

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading