” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

“நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்”

நேவிஸ் பிலிப் கவி இல (398) 20/02/2025

விலையில்லா நிலமிதிலே நாம்
நினைப்பதெல்லாம் நடந்து விட்டா
நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்குமென
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க

நம்ம நிலமைக்கு மேல
நினைப்பு வந்தா
அளவுக்கு மேல ஆசை வந்தா
நிம்மதி இருக்காது
உள்ளதும் நிலைக்காது

இருக்கிறதை விட்டு விட்டு
பறக்கிறதுக்கு ஆசைப்பட்டா
கான மயிலாட பாத்து நின்ற வான் கோழி
தன்சிறகை தான் விரித்து
ஆடும் கதை ஆகிடுமே

பாலும் சோறும் வேணும்
பஞ்சு மெத்தை தூக்கம் வேணும்
பட்டாடை கட்ட வேணும்பவுசாக வாழவேணுமென்ற
நினைப்பெல்லாம்
மரமேற முடியாதவன் கொம்புத் தேனுக்கு
ஆசைப்பட்ட கதை போல

கூழோ கஞ்சியோ வயறார குடிச்சுப் புட்டு
கட்டாந் தரையினிலே
நிம்மதியாய் தூங்குவதே
மகிழ்ச்சியான வாழ்க்கையன்றோ…

நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading