நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

20.2.25
ஆக்கம் 179
நினைப்பதெல்லாம்
நடந்து விட்டால்

காலத்தின் கோலம்
வேண்டும் வேண்டாத
பிறப்பும் இறப்பும் வந்திடுமே

பூக்கள் பூப்பதும்
பூத்தது உதிர்வதும்
இளமை முதுமை
இயற்கையின் வரப்பிரசாதமாய்த்
தந்திடுமே

அடியும் முடியும் தேடி
அலையும் மானிடர்
மனதில் நிலையற்ற
வாழ்வின் எடுத்துக் காட்டாகப் பதிந்திடுமே

கனத்த நினைவுகளில்
காணும் கனவுகள் நிறைவேறாது கடந்து
விட்ட காலம் சிதைந்திடுமே

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் முயற்சி
எடுக்காத முடுக்கு
மேல் நோக்கி செல்ல
விடாது கீழ் நோக்கிச் சென்று உயர்வு இல்லாது அற்புத
வாழ்வு தொலைந்திடுமே .

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

Continue reading

வணக்கம் வசந்தாஜெகதீசன் வீட்டுத்தோட்டம்...அழகுறுபயனின்பயன்பாடு ஆரோக்கியஉணவின்முதலீடு முயற்சியின்மூலதனமாகும் முழுமையில்மனதுநிறைவாகும்காய்கறி,கனிகள் ருசி நிகரே பொழுதுபோக்கின் முதன்மை வலு முதலீடு அற்ற வருமானம் நித்தம் நித்தம் பயனாகும் பலராய்...

Continue reading