பட்ட மரம்

மனோகரி ஜெகதீஸ்வரன்
சடைத்துக் குடையாய்
நிழலிட்டமரம்
சாமரம் வீசிச்
சதிராடிச் சரசரத்தமரம்
முதிர்வு கண்டு
பட்டுவிட்டது இன்று
புடைத்துப் பழுத்த கனிகாய்கள்
தூக்கணாம்குருவிக் கூடுகள் போன்றே
தொங்கியாடும்
புழுக்களும் பதுங்கி வாழும்
அழுகி வீழ்ந்தும் பழங்கள் நாறும்
கல்லெறி பட்டும்
காய்கனிகள் வீழும்
அதுகண்டு படையெடுத்த
பறவைகள் இடம்மாறும்

தங்கும் பறவைகள்
எச்சத்தால் கோலமிடும்
வந்தவர் மனமோ
வசைபாடி ஓலமிடும்
வம்பு வசை வாயாடல்
தெம்பு தந்திடும் உரையாடல்
கம்புச்சண்டை கிட்டி விளையாடல்
முன்பு நடக்கும் எப்போதும்
மூலமிழந்து நிற்கின்றதிது இப்போது

Nada Mohan
Author: Nada Mohan

ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

Continue reading

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

Continue reading