ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

பணி…

வசந்தா ஜெகதீசன்
பணி…
வரமானது வாழ்வானது
வளம்பெருக்கும் துறையானது
சமூகத்தை சீராக்கும்
சராசரி மனிதத்தை நிலை நிறுத்தும்
துறைசார் பணி நூறு
துலங்கிடும் உலகிற்கு ஈடானது
வரம்பெல்லை வகுத்திடும்
வருமான முதலீடு
பணிக்குள்ளே பல பாதை
பாரெங்கும் இதன் சாலை
தொழில் நுட்ப உலகியலில்
மின் போல பாய்கிறது
மிடுக்குடன் இயந்திரங்கள்
பணிகள் பல பஞ்சமாகும்
பலதுறைகள் செயலிழக்கும்
வேலையில்லாத் திண்டாட்டம்
விலைவாசி போல
எகிறிடுமே
இயந்திரமயமாக்கல்
வையத்தின் வசமாகுமே!
நன்றி
மிக்க நன்றி

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading