பண்டிகை வந்தாலே

சிவருபன் சர்வேஸ்வரி

பண்டிகை வந்தாலே

பண்டிகை வந்தாலே பரவசம் பாருமே //
இங்கிதமான ஆனந்தம் இகமதில் கேளும் //

சங்கீத ஸ்வரமாய் இசைப்பார்கள் கூடியே //
பண்டிகையில் பூத்தாடை எடுப்பதும் மகிழ்வே //
சின்னஞ் சிறுசுகள் சிங்காரச் சிட்டுக்கள் //
களிப்புடன் பட்டாசும் கொழுத்தியே விளையாட்டும் //

பட்டங்கள் எற்றுவதும் சவாரிகள் ஓட்டுவதும் //
போட்டிகள் வைப்பதும் வெற்றிகள் ஈட்டுவதும் //

எத்தனை நிகழ்வுகள் கலாச்சாரக் கொண்டாட்டம் //
ஆடல் பாடல் கூத்து நாடகமென்றும் //
ஆங்காங்கே தோன்றும் அரங்குகளிலே கண்மலரவும் //

வந்தாலே இத்தனையும் நடக்கும் ஆனால் //
உண்ணவும் உணவின்றி உறங்கவும் இடமின்றி//
வாழவும் வழியின்றி வாடும் நெஞ்சங்களுமுண்டு //

துன்பத்தின் சாரலில் நனையும் நிலையில் //
எத்தினம் வந்தாலும் இருண்ட இரவாகும் //

காலத்தின் லீலைகள் கழிப்பதும் கலங்குவதும் //
அத்தனையும் நீங்கிடவே ஆண்டவன் அருளட்டும்//

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading