அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

பத்மலோஜினி திருசெந்தூர்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 236

தலைப்பு – குழலோசை

சுருதியும் லயமும் ரம்மியமான குழலோசையோடு
ஸ்வரமும் சாகித்தியமும் தென்றலாய் இசைந்தாட
ஐதியும் நவரசமும் நாட்டியமாய் நடணமாட
பார்ப்போர் பரவசமாய் பார்த்து மகிழந்தனர்.

எத்தனை துவாரங்கள் குழழினிலே இருந்தும்
அத்தனையும் மூச்சுக் காற்றினால் இசையாகி
இத்தனைக்கும் விரல்கள் மூடிமூடி தொடுக்க
பித்தனாய் மாற்றுது எம்மை குழலோசை.

கண்ணன் குழலோசை காதினிலே பாய்ய
சரஸ்வதியின் வீணை வசீகரமாய் இசைக்க
நடராஜனின் உடுக்கை உவகையாய் யொளிக்க
கௌரியின்(என்) வயலீனும் ஈடுகொடுத்து நிற்குது.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
30/09/2023

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading