பயணம் தொடரட்டுமே..

ராணி சம்பந்தர்

27.06.24
ஆக்கம் 322
பயணம் தொடரட்டுமே

நல்லவன் என நா வளர்ப்பவன்
வல்லவன் என
வாழாதவன்
பொல்லாதவன் எனப்
பேரெடுப்பவனோ
அல்லும் பகலும் தில்லு
முள்ளில் சிக்கித் தீயில்
கருகுபவன்

கள்ளக் குறிச்சியில்
குடி கூத்தாடியவன்
அள்ளிக் குடித்த மது
மயங்கியவன்
துள்ளும் உள்ளமதை
ஊனமாக்கியவன்
சில்லறையில் மலிவு
எனச் சீரழித்துக்
கல்லறையில் உயிரைச்
சீதனமாக்கியவன்

பல்லைக் கடித்து வாழ்ந்த மங்கையர்
சொல்லைக் கேளாத
தொல்லையர் இல்லை
என் நல்ல பாதை கண்டு பயணம்
தொடரட்டுமே
பரிதாப நெஞ்சங்கள்
அஞ்சி அஞ்சி வாழ்ந்த
அநியாயம் போதும் போதும் என்று

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading