மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

பல தேவகஜன்

பறவைகள் சிறகடித்து
வானவெளியில் பறக்க
சிறு கீற்றாய் சூரிய ஒளி
உலகம் எங்கும் பரவ
வெட்கம் கொண்ட
மேகக்கூட்டம்
விலகியே ஓடிவிட
புலர்ந்தது காலை
புதுப் பொலிவோடு.

இடை நெளிந்து
உடல் வளைந்து
நிமிர்ந்து நிற்க்கும் மரங்கள்
உரிமையோடு உட்கார்ந்து
இசைபடிக்கும் குயில்கள்
அழகுடனே தலையசைத்து
மலர் தூவும் இலைகள்
அதிகாலை பொழுதுக்கு
அர்ச்சனை தூவும் குருக்கள்.

ஊருக்கு குறுக்கே ஓடும்
கறுப்புத்தார் ரோட்டு
உடல் முழுக்க ஈரமாகி
தலை குனியும் புல்லு
நீட்டி நிமிர்ந்து நிற்க்கும்
அணையாத மின்கம்பம்
புலர்கின்ற காலைக்கு
தீபமிடும் பூசாரி.

ஆங்காங்கே அசையத்தொடங்கும்
மனித வலுக்கூ ட்டம்
அவர்களை ஏத்திச்செல்லும்
வாகனங்களின் சத்தம்
ஒருக்காலும் நின்றதில்லை
நிதானமாய் பார்த்ததில்லை
அழகாக புலர்கின்ற
அதிகாலை பொழுதுதனை.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading