(திருத்தம் ) நட்பென்றாலே 30.07.2026

நட்பென்றாலே (772 )செல்வி நித்தியானந்தன் அன்பு அரவணைப்பு என்றும் கைகொடுப்பு ஆபத்தில் அறிந்து துணையாகும் சிறப்பு அகிலத்தில் நட்பு நல்லதொரு...

Continue reading

நட்பென்றாலே

செல்வி நித்தியானந்தன் நட்பென்றாலே (772) அன்பு அரவணைப்பு என்றும் கைகொடுப்பு ஆபத்தில் அறிந்து துணையாகும் சிறப்பு அகிலத்தில் நட்பு நல்லதொரு படைப்பு அருமை...

Continue reading

பாரதியைத்தேடினேன்……..

இரா.விஜயகௌரி

உரிமைக குரல் தொடுத்து
உள்ளக்கமலம் தொட்டு
திண்ணிய மொழி துளைத்து
தீர்க்கமாய். கவிதை தந்தான்

நாணிடா நிமிர்ந்தெழுந்து
நம் மாதர் தம் நிலை விழிக்க
வேழமாய் முழங்கி நின்றான் குரல்
வேங்கையாய். சீறிப் பாய்ந்தான்

வறுமையின் சிறைப்பிடிக்குள்-அவன்
சொற்கள் வசப்பட்டு தொலையவில்லை
மீறியே எழுந்து செப்பி-எங்கள்
உதிரத்துள் தமிழ் வரைந்தான்

மனையவள் தோளணைத்து-வாழ்வு
இனிமைக்கும் இசை பொழிந்தான்-ஆங்கு
செழுமையை உணரா மாந்தர் முன்னே
சீரினை இழந்து நின்றான்

வேழத்தால் இறக்கவில்லை-ஆங்கே
கை கொடாமாந்தர் தம்மால்
நோயினால் நுடங்கிச் சாய்ந்த
பாரதி எங்கே தேடினேன் தேடினேன்

இன்று கண்டும் காணா மனிதர் நாங்கள்
இங்கு பாரதிகள் தோன்ற மாட்டார்
பச்சோந்தி இனமே நாங்கள்

Nada Mohan
Author: Nada Mohan