மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

பார்த்தீபம் ஒளிர்கிறது..

வியாழன் கவி 2213!!

பார்த்தீபம் ஒளிர்கிறது..!!

வானத்து வெளியெல்லாம்
ஒளி கொண்ட உன் முகம்
பாரதத்தின் செயல் தன்னால்
பாராமுகமான காவியம்
காற்றோடு கரைந்ததோ
கனவாகிப் போனதோ
அல்ல கண்களுக்குள்
நினைவாகிச் சிறைப்பட்டது..

ஊரெழு மண் ஈந்த மகன்
உணர்வோடு மொழி ஆழ
கனலாகிக் கரைந்தான்
கண்ணீராகிக் கசிந்தான்
நல்லூரான் வீதியிலே
நல்ல தொரு திருமகன்
மொழி வாழ உயிர் ஈந்தான்..

ஆண்டுகள் எத்தனை அகல
மீளாத துயரில் தேசம் கரைய
இராசையா பார்த்தீபன்
இன்னும் இறையாய்த் தானிருக்க
இலக்கு ஒன்று இலட்சியமாக
நம்பிக்கை தேக்கிய ஔடராய்
அண்ணல் திலீபன் விழித்திருப்பான்..
சிவதர்சனி இராகவன்
24/9/2025

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading