முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

பால தேவகஜன்

ஆறு மனமே!

நீ! சற்றும் தயங்காமல்
இத்தோடு முற்றும் என்றாய்
நானோ! முற்றும் முளுதாக
வியந்தே நின்றேன்.
என் பாசம் உணராமல்
நீ! பிரியநின்றாய்
உன் வேசம் புரியாமல்
நானோ மோசம் போனேன்.

புரிதலை தொலைத்தது
எம் உறவு அல்ல
நீ! மட்டும்தான்
நான் என்றுமே
புரிதலோடுதான் இருக்கின்றேன்.
ஈரமிழந்த நிலத்தின் வரட்சி
பசுமையை ஏற்காத்து போல்
உன்னை இழந்த என் வாழ்வு
பசுமையை ஏற்க மறுக்கின்றது.
பார்க்கும் இடமெல்லாம்
நாம் காதலோடு கடந்த
உன் நினைவுத் துளிகள்!
கண்களை நனைக்கின்றது.

வேஷங்களோடு நீ!
பாசங்களோடு நான்!
இதில் மோசம் போனது
இன்று என் வாழ்வானாலும்
என்றோ ஒரு நாள்
உன் வாழ்வும் மோசமாய் போகலாம்
அன்று அந்த மோசத்தில்
நீ! உணர்வாய்
நான் உன்மேல் கொண்ட பாசத்தை!

என் மனது தவிப்பதையறிந்தும்
நீ! உணர்விழந்தவளாய்
எனை உதறிதள்ளிவிட்டு
பிரிவென்ற பேராயுதத்தால்
என் தாக்கி என் வாழ்வையே
காயமாக்கிய சென்றாலும்
என்றைக்குமே நான் உன்னை
வெறுக்கவே மாட்டேன்
ஏனேன்றால் நான் உன்மேல்
கொண்ட காதல் உண்மையானது
என்றைக்குமே நீ! என் காதலி!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading