அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

புனிதா கரன் கவிதை 03 UK

தலைசாய்ப்போம் மனிதம்
நிமிர வாழ்ந்தவர்க்காய்//
ஒடுக்கப்பட்ட பேச்சுரிமை
தரப்படுத்தப்பட்ட கல்விமுறை//
பல வழிகளில்
பறிக்கப்பட்ட உரிமைகள்//
அறவழிப் போராட்டம்
அத்துமீறிப் போகவே//
ஆயுதம் ஏந்தியே
அன்றாடம் போராடினர்//
காடுமேடு பொருட்டல்ல
காலநிலை பார்க்கவில்லை//
தன்னினத்தின் மீது
கொண்ட விருப்பினாலே//
தன்னைப் பற்றிய
சிந்தனை இல்லை//
ஊணுறக்கம் இன்றி
உறவுகளை மறந்து//
உரிமைகளை மீட்டிடவே
விதையாகி போனார்களே//
வீசும் காற்றும்
வேதனையைச் சொல்லுதே//
குருதி வடிந்தமண்ணோ
குமுறி வெடிக்குதே//
இன்னலைப் பொறுத்திடா
இயற்கையும் சீற்றம்கொள்ளுதே//
தன்னலம் கருதா
தமிழ் வீர்ர்கள்//
எல்லோர் நினைவிலும்
என்றும் வாழ்கின்றனர்//
ஏற்றிய தீபத்தில்
எழிலாய் சுடர்விடும்//
மாண்புடன் மனிதநேயம்
மாசற்று வாழ்கவே//

புனிதா கரன்
கவிதை 03
UK

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading