ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

புலவர்மணி இளமுருகனார்

ரஜனி அன்ரன் (B.A) “புலவர்மணி இளமுருகனார்“ 12.06.2025

ஈழத்து தமிழறிஞர் தமிழ் உணர்வாளர்
தமிழாசான் நாடகஆசான் கண்டனஆசானென
பன்முகத் திறமைகொண்ட புலவர்மணிஐயா
நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் புதல்வர்
நவாலியில் உதித்தாரே ஆனித்திங்கள் பதினொன்றிலே !

செந்தமிழ்மரபு சிதைந்து போவதுகண்டு
நொந்தார் மனம்வெந்தார் புலவர்மணிஐயா
கட்டுரைகள் கண்டன உரைகளென
சட்டெனவே எழுதினார் வாரப்பத்திரிகைக்கு
பண்டிதர் பரீட்சையும் எழுதிப் பண்டிதராகி
பாடநூல்கள் பலதையும் யாத்து
பண்டிதர்கள் பலரையும் உருவாக்கினாரே !

தமிழுக்கு பாதுகாப்புக் கழகத்தையும் நிறுவி
தனித்தமிழின் தூய்மையை நிலைநாட்டி
தமிழுக்கு கவிதை உரைநடையென்று
படைப்புக்கள் பலதையும்தந்து
கலைச்சொல் ஆக்கத்திற்கு பணியுமாற்றி
தொண்டுகள் செய்தாரே தமிழுக்கு!

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading