பூக்களின் புதுவசந்தம்

ஈர்ப்பில் கவரும்
ஈகை நிறைக்கும்
மலர்களின் சேவை
மதிப்புறு உலகே

சித்திரை மகளை
சிரிப்புடன் ஏற்கும்
வண்ணக் கோர்ப்பில்
வசப்பட வைக்கும்
அழகுறு மலர்களின்
அடைக்கலம் நாமே

பூத்தே பாரிற்கு
பொட்டினைச் சூட்டும்
புதுமை மலர்ச்சியில்
புவியே சொர்க்கும்

மனிதத்தின் தேவைக்கு
மாண்புகள் சுட்டும்
அழகுமலர்கள் போல
அணியம் உண்டா
பாரிற்கு பலவகை
வண்ணத்தை ஊட்டும்
அழகுக்கு நிகராய்
அற்புதம் உண்டா
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading