ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

பூமி 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
28-10-2025

ஓயாமல் சுழலும் கோளம்
ஓய்வற்ற கடமைகளும் நாளும்
கோடான கோடி உயிர்களின் இருப்பிடம்
கொடுக்கின்றாய் தீரா நல்வளம்!

விதையென விழுந்தால் விருட்சமும்
வீணாகிப் போனால் பசளையும்
பச்சைப் போர்வை போர்த்தி,
பஞ்சமின்றி எம்மைக் காத்து

அடர்ந்த காடெல்லாம் அழகு
அமைதியாய் ஓடும் நதியழகு
வர்ணப் பூக்கள் அழகு
வான்மழை மேகமும் அழகு

நிலக்கரி, தங்கம், நிதிகளென நிலத்தினுள் பல வரங்களென
உயிர்களின் பசியும், உறக்கமும்
உனது இயக்கத்தில் அடக்கமும்

இயற்கை வளத்தை அளிப்பவளே
எதிர்கால சந்ததி சிறப்பதற்கென
வீட்டிற்கு ஒரு மரம் நாட்டி
வீண் அழிவுகளை அகற்றி பூமி காப்போம்.

Jeba Sri
Author: Jeba Sri

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading