பேரன்பு

நகுலா சிவநாதன்

பேரன்பு

இல்லம் என்னும் நல்லறத்தில்
இடர்கள் இன்றி வாழ்ந்திடவே
மெல்லப் பாயும் பேரன்பு
மேன்மை பெறுமே நல்வாழ்வில்
செல்ல குழந்தை பேசிடவே
சேர்ந்து பழகும் நல்லன்பு
சொல்ல சொல்ல இனித்திடுமே
சொருக்கம் காண விரைந்திடுமே!

உலகில் மாந்தர் வாழ்ந்திடவே
உண்மை அன்பு வேண்டுமென்றும்
கலகம் போக்கும் காரியத்தை
கனிந்து செய்ய முயன்றிடுவோம்
மலரும் தூய அன்பினிலே
மகிழ்ச்சி யுண்டு பாரினிலே
நலமாய் வாழ முனைந்திடுவோம்
நாடே போற்ற வாழ்ந்திடுவோம்

நகுலா சிவநாதன் 1783

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

Continue reading