தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 261
16/04/2024 செவ்வாய்
“பெருமை”
—————
உயிரைச் சுமந்திடும் கருவை,
உளமாய் போற்றுதல் பெருமை!
உயிரினும் மேலாமெம் தமிழை,
உயிராய்ச் சுமப்பதே பெருமை!

உலகத் திருமுறையின் மேன்மை,
உருவாக்கியது தமிழன் திறமை!
விலக வொண்ணா இவ்வருமை,
வியந்து போற்றுவதில் பெருமை!

ஐம்பெரும் காப்பிய மேன்மை,
அறிந்தால் கிடைக்கும் பெருமை!
நம்பெரும் இலக்கிய அருமை,
நாடெல்லாம் பரவிடப் பெருமை!

உழுதுண்டு வாழும் உணர்வை,
உலகே உணர்வது பெருமை!
தொழுதுண்டு வாழும் மடைமை!
தொடர்ந்திட மங்கிடும் பெருமை!

கள்ளின் நிறமது வெண்மை!
கறவையின் பாலுமத் தன்மை!
புள்ளின அன்னத்தின் திறமை,
புகுந்திடின், சேருமே பெருமை!

நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading