மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 262
23/04/2024 செவ்வாய்
“நேரம்”
———
மந்த மாருதமென வீசும்!
மாலை மலருமவ் நேரம்!
சந்ததம் செவ்வாய் கூடும்!
சந்தமுடன் சிந்து பாடும்!

பந்தம் கொண்டிங்கு பாவலர்,
பாடுவர், கவிபல போடுவர்!
சிந்தையில் உந்திடும் கவிஞர்,
சீர்பெற வேண்டிட வாழ்த்துவர்!

வாழ்வினில் வந்திடும் நேரம்,
வகைகள் இரண்டென ஆகும்!
ஊழ்வினை செய்திட்ட பாவம்,
உனக்கது வந்திங்கு சேரும்!

நல்லவை நல்லதைக் கூட்டும்!
நலமதை உன்னிடம் சேர்க்கும்!
பொல்லவை பொருமிடும் நேரம்,
பொங்கிட விளைந்திடும் கோரம்!

நல்லவை செய்வதற்கு நேரம்,
நண்ணிடும் போததைப் பாரும்!
இல்லையேல் தவறிடும் யோகம்!
ஈற்றினில், இதயமே நோகும்!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading