மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:278
24/09/2024 செவ்வாய்
விடியுமா தேசம்?
————————
விடியுமா எங்கள் தேசம்?
வினவுது ஆஷா பாசம்!
படியுமா முரட்டுக் கேசம்?
படிந்திடின் விடியும் தேசம்!

அரசியலில் எம்மவர் வல்லவர்!
அண்டிப் பிழைப்பதில் மன்னவர்!
உரசல் பேச்சதில் உத்தமர்!
ஊரை ஏமாற்றிடக் கற்றவர்!

தீபாவளிக்கு விடியு மென்பர்!
தீந்தமிழும் சிறக்கு மென்பர்!
நாமாவளி சொல்வோ மென்பர்!
நாளைக்கே பெறுவோ மென்பர்!

உள்ளத்தில் தூய்மை இல்லை!
உணர்வதனில் தமிழும் இல்லை!
கள்ளத்தில் ஏதும் குறைவில்லை!
காவலுக்கு இங்கு எவருமில்லை!

பூனைக்கு யார்மணி கட்டுவது?
புதுவாழ்வு எப்போது எட்டுவது?
தானைக்கு யார்வழி காட்டுவது?
தரணிக்கு விடிவெவர் ஈட்டுவது?
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading