தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 286
12/11/2024 செவ்வாய்
“சூர வதை”
—————
கந்தபுராணம் சொல்லும் கதை!
கந்தனவனும் வெல்லும் கதை!
சிந்தைதனில் நிற்கும் கதை!
சீலம்தனை செப்பும் சூரவதை!

எத்தனை கதைகள் கேட்டாலும்
இதிகாச புராணம் சொன்னாலும்
வித்தகர் பலரும் உரைத்தாலும்
வினைசெய் பாதகர் விழியாரோ!

ஆணவச் சூரர்கள் ஆயிரமுண்டு!
ஆடிடும் அவருக்கு கூட்டமுண்டு!
கோணாமல் கேட்க யாருண்டு?
கொட்டம் அடக்க வழியுண்டோ?

சிவன் என்றிங்கு யாருமில்லை!
சித்தரை நம்பிட முடியவில்லை!
அவனி வனென்று முடிவுமில்லை!
அநேக சூரரால் கடும்தொல்லை!

நீதி நியாயமோ எங்குமில்லை!
நீசரை ஒழிக்கவும் சட்டமில்லை!
நாதியிலா நமக்கும் வழியில்லை!
நமக்காய் வேலனும் வருவானோ?
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading