முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:244
05/12/2023 செவ்வாய்
கலவரம்
_______
கலவரம் சிலருக்குத் தனி சுகம்!
காண்கி றோமிதை தினந்தினம்!
நிதிவரம் கொண்ட சில சனம்,
நிகழ்த்திடு மேயிதை அனுதினம்!

கலவரம் எமக்கோ பழங்கதை!
கண்டோம் விண்டோம் நாமதை!
நிலவரம் அடிக்கடி மாறுவதை,
நினைக்க உயிரே வேகுததை!

இறைவன் ஒருவன் தானென்பர்!
இறைவழி எல்லாம் ஒன்றென்பர்!
மறைதனில் பேதம் ஏதென்பர்!
மனிதம் என்பதை மறந்திடுவர்

மொழிச் சாக்கிலும் மூண்டுவிடும்!
முழுதாய் மக்களை அழித்துவிடும்!
கழிவிரக்கம் ஏனோ மறந்துவிடும்!
காணும் யாவும் பொசுங்கிவிடும்!

சாதியும், இனமும், சமயமதும்,
சரிசமம் என்ற உணர்வு வரும்!
பேதமும் எல்லாம் நீங்கிவிடும்!
புதிதோர் உலகம் பிறந்துவரும்!

நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading