17
Sep
இரா.விஜயகௌரி
மொழியே முகவரி மொழித்திறன் விரல் வழி
எழுத்தே இலக்கென இழைத்திடல் எழில் வழி
கொடுத்தலில் விரித்தெழும்...
17
Sep
மொழியே அடையாளம்
சக்தி சிறினிசங்கர்
இனிது வாழ இன்றே முந்துவோம்
கனவு காணுதல் கடமையாய் எண்ணுவோம்
நனவாய் ஆக்க நாமும்...
17
Sep
மொழியே முகவரி
மொழியே முகவரி
மொழியே முகவரி
உயிரே என் தாய்மொழி
வழியே பேசும் வரலாறும் கூறும்!
வாழ்வாங்கு...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 246
19/12/2023 செவ்வாய்
நிலா உலா
—————-
நிலாவைப் பார்க்க நானும்..
உலாச் சென்று வந்தேன்!
நலமும் கேட்டு வந்தேன்!
நாடும் பார்த்து வந்தேன்!
கண் மயங்கும் தோற்றம்!
கவரும் உடலின் தேட்டம்!
என்ன என்று சொல்ல!
எங்கு வார்த்தை தேட!
மெல்ல மெல்ல நகர்ந்து..
மேலே இருந்து இறங்கி…
பள்ளம் மேடும் பார்த்து..
பாதம் அவள்மேல் சேர்த்து…
உள்ளம் கொஞ்சம் கூச…
உதடும் மெல்லக் காய…
பள்ளம் மேடும் கடந்து..
பாய்ந்து செனறேன் அருகே!
பாயும்போது கால் தடுக்கி..
பலமாய் விழுந்த அடியாலே..
வாயைத் திறந்து கத்திடவே..
வந்து நின்றாள் என் மனைவி!
நிலா-உலா என தலைப்பு தர…
நினைவுகளை நான் சுழலவிட..
நித்திரை என்னை ஆட்கொள்ள..
நிலவுக்கு நானும் உலா சென்றேன்!
நன்றி
“மதிமகன்”
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...