12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 254
20/02/2024 செவ்வாய்
“பங்கு நீ”
————
பங்கு நீ! பாதி நீ-என்
பாச மலரே என்றும் நீ!
இங்கு நான்-அங்கு நீ!
இருப்பதேன் விளம்பு நீ!
திங்கள் நீ திசையும் நீ!
தீங்கில்லாத திருவும் நீ!
எங்கள் ஊர் ஒளியும் நீ!
எல்லா மனமும் கவரும் நீ!
எங்கும் நீ எதிலும் நீ!
ஏழை வீட்டு விளக்கும் நீ!
சங்கம் புகழ் சரித்திரம் நீ!
சாளரம் ஊடே சிரிப்பதும் நீ!
பங்குனி மாசத்து பரவசம் நீ!
பாவையர் மனதில் படிவதும் நீ!
வைகறை வரை விழிப்பதும் நீ!
வரைகவி ஓவியம் ஆவதும் நீ!
அங்கு இங்கென அலைவாய் நீ!
ஆண் டாண்டாய் நிலவாய் நீ!
பங்கம் செய்த பிறையாய் நீ!
பரமன் சடையில் உறைவாய் நீ!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...
14
Mar
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _ 225
"மூத்தோர் "
வயதில் அறிவில்
அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் முன்னோர்கள்...