” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:259
02/04/2024 செவ்வாய்
ஊக்கம்
————
ஊக்கம் உயர்வு தரும்- ஆதலால்
ஊக்கம் உயிரென நோக்கு!
காக்கும் கடவுளும் காப்பாற்றார்-உன்
ஊக்கம் தவறின் எப்போதும்!

இன்று, நாளையென நீள-ஊக்கம்
நின்றே போய்விடும் நினை!
குன்றை, மலையாய் எண்ணா ஊக்கம்,
நன்றே நகர்ந்திடும் அறி!

ஊக்கமிலா நோக்கம்-பெரிதெனினும்,
தேக்க நிலைக்கே இட்டுச் செல்லும்!
ஆக்கம் தந்திடுமே வாழ்வில்-ஊக்கம்
நோக்கத்தையும் நிறைவு செய்யும்!

செல்லும் பாதை நீண்டிடினும்-ஊக்கம்
வெல்லும், உன்வாழ்வும் சிறக்கும்!
அல்லும் பகலும் உழைத்தாலும்-ஊக்கம்
இல்லா நோக்கம் பிசுபிசுக்கும்!

உலகில் இலக்கு உண்டேனும்- ஊக்கம்
விலகில் பிழைத்திடும் இலக்கு!
இலகில் காத்திருந்த கிளியாகி-ஊக்கம்
விலகில், விளைந்திடும் விபரீதம்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading