மனித நேயம்

மனித நேயம்

மாற்றம் வேண்டுமே மலரும் நினைவுடனே

தேற்றம் கொண்டே வாழ்வும் சிறந்திடவே

போற்றும் மனிதம் புறப்படுதல் நன்றே

ஏற்றம் தேவையே எங்குமே காணவே

வாட்டும் நெஞ்சங்கள் வளத்துடன் மாறவும்

ஆற்றும் சேவைகள் புனிதமும் ஆகட்டும்

மீட்டும் யாழில் கீதமும் இசைக்குமே

தீட்டும் சொற்களில் தீதும் இன்றியே

சுட்டும் போதிலே சுதந்திரம் பிறக்கட்டும்

சட்டம் என்பதில் சத்தியம் நிலவட்டும்

நீதியின் நிலையும் இருட்டறை இல்லையே

மோதியே வாழ்வதில் பலனும் தோன்றாது

மேவிய பண்புடன் மேலோங்க ஏகுவாய்

காலம் வாழ்த்தவே கடமையைப் பற்றுவாய்

சீலம் உணர்வாய் சீருடன் ஓங்குவாய்

சர்வேஸ்வரி சிவரூபன்

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading