06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
03
Jul
வர்ண வர்ணப் பூக்கள் 65
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
மனோகரி ஜெகதீஸ்வரன்
விடுமுறை
ஏந்திரக் கூடுகளாயே
எம்மவர் இயக்கம்
தந்திரம் செய்தே வீழ்த்தும்
வேலைப்பளுவும் மயக்கி
மந்திரச் சொல்லும்
மாறையே செய்யும்
மழுங்கிடத் தயக்கத்தையே எய்யும்
காவு திறனற்று உணர்வும் ஓயும்
களைப்புற்று மெய்யும் சாயும்
கடினமும் கண்களில் புகும்
மாட்டியே விழிப்போம்
மத்தளம் போன்று
மனதிலே மகிழ்வு அகன்று
இரக்கமற்றே குடையும் இவ்வாறு நடைமுறை
இதனைச் சீராக்கம் செய்யவருமே விடுமுறை
வந்தால் விடுமுறை
வாசலும் விரியும்
சுந்தர நிகழ்வுகளைச்
சுகிக்கத் தூண்டும்
சொந்தங்களும் இணையும்
சொற்பலவும் உலவும்
சந்தச் செறிவால்
சமரசம் நிலவும்
நொந்த இதயத்தின்
நோவும் சுருங்கும்
உறவுச் சீண்டலால் சோர்வும் மறையும்
மறந்தும் போகும்
மனது பட்டவலி
பறக்கும் உடலும்
பரவசம் முற்றி
இறக்கை கட்டி
மீண்டெழும் மிடுக்கும்
பிறக்கும் புறத்திலும்
பிற்பல புதுமைகள்
மனோகரி ஜெகதீஸ்வரன்

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...