இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

தவிப்பு

உருவற்ற உணர்வே தவிப்பு
உருவாகின் உருக்கிடும் நெருப்பு
நொறுக்கிச் சரித்திடும் தவிப்பு
உருக்கொள்ளா மனமும் உண்டோ
கருக்கிடு வழிகண்டு
சுருக்கிடுவாரே
மருவற்று வாழ்வார்
மகிழ்வோடு

அச்சம் ஆளாது விரட்டி
ஆதித ஆசை கட்டி
உச்சம் தொடுஉணர்வு ஊட்டி
உழைப்பைக் நாளும் பற்றி
நெருக்கீடு குறுக்கீடு
தடுத்து
நெஞ்சுரம் கொண்டு சுழலின்
அருகேறி அருட்டாது தவிப்பு
அகமும் ஆடுகளம் ஆகாது

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading